ஜனாதிபதி இல்லாத போதும் நாட்டில் புதிய நியமனங்கள்

பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவும் பதில் பாதுகாப்பு அமைச்சராக பிரமித பண்டார தென்னகோனும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு இன்றையதினம் நாட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் சனிக்கிழமை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.